அருமையான சுவையில் இளநீர் புட்டிங் ரெசிபி

வித்தியாசமான சுவையில் இளநீர் புட்டிங் ரெசிபி எப்படி செய்றதுனு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

அகர் அகர் பொடி - அரை டேபிள்ஸ்பூன்

இளநீர் வழுக்கை - கால் கப்

இளநீர் - ஒரு கப்

பால் - ஒரு கப்

கண்டென்ஸ்டு மில்க் - அரை கப்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இளநீர் வழுக்கையை மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அகர் அகர் பவுடரை சேர்த்து நன்றாக கலந்து சூடு செய்யவும்.

மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பால், கண்டன்ஸ்டு மில்க், இளநீர், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்ததாக அகர் அகர் கலவை, இளநீர் வழுக்கை சேர்த்து கலந்து சூடானதும் ஆற வைத்து கப்புகளில் ஊற்றி 30 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

சுவையான இளநீர் புட்டிங் ரெடி..!

More News >>