அசைவப் பிரியர்களுக்கு பிடித்த சிக்கன் மலாய் டிக்கா ரெசிபி

வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சிக்கன் மலாய் டிக்கா எப்படி செய்யறதுன்னு இப்போது பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன்

சீஸ் - 30 கிராம்

சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

பிரஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகள் ஏலப் பொடி இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு ஃப்ரிட்ஜில் சுமார் அரைமணிநேரம் வைக்கவும்.

மற்றொரு கிண்ணத்தில் சீஸ் சோள மாவு தயிர் பிரஷ் க்ரீம் ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும்.

ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சீஸ் கலவையுடன் சேர்த்து, மிளகுத்தூள் தூவி நன்றாகக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் ஒவ்வொரு துண்டுகளை குச்சியில் சொருகி அதில் வைத்து வறுத்து எடுக்கவும்.

சுவையான சிக்கன் மலாய் டிக்கா ரெடி..!

More News >>