அடுத்த மாதத்திற்குள் தமிழிசை மாற்றமா?

தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் அடுத்த மாதத்திற்குள் மாற்றப்படுவார் என்று எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார்.

நாடு முழுவதும் பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியுள்ளது. வாரணாசியில் இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சிப் பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் பா.ஜ.க.வில் சேர்ந்தது முதல் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு கூட அழைக்கவில்லை. நான் பிராமணன் என்பதாலோ, என்னவோ தெரியவில்லை. வாஜ்பாய் அஸ்தியைக் கரைக்கச் சென்ற ஊர்வல நிகழ்ச்சிக்கு மட்டும் என்னை அழைத்தார்கள்.

இந்த நிலைமை கொஞ்ச நாளில் மாறும். தமிழக பா.ஜ.க. தலைமை அடுத்த மாதத்திற்குள் மாற்றப்பட்டாக வேண்டும். அதை டெல்லி மேலிடம் முடிவு செய்து விட்டது’’ என்று தெரிவித்தார்.

விஷால் ஒரு சுண்டக்காய்; நடிகர் எஸ்.வி.சேகர் கடுப்பு
More News >>