ராஜ்யசபா தேர்தல் 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர்

ராஜ்யசா எம்.பி. தேர்தலில், வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 3 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இதில் திமுக சார்பில் தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும், மற்றொரு இடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு இடத்தை மக்களவைத் தேர்தலின் போது கூட்டணி பேச்சுவார்த்தையில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இந்த 3 பேரும் இன்று வேட்பு மனு செய்கின்றனர்.

வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்றே கடைசி நாள். நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 11-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே போட்டியிட உள்ளதால் அனைவரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. வேட்பு மனு வாபஸ் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் 11-ந் தேதி மாலை வெளியாகும் போது 6 பேரும் போட்டியின்றி ராஜ்யசபா எம்பிக்களாக தேர்வானதாக அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

ராஜ்யசபா தேர்தல்; 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர்
More News >>