பன்னீர் கேட்டால் சிக்கன் ஜொமோட்டோவுக்கு ரூ.55 ஆயிரம் அபராதம்

பன்னீர் பட்டர் மசாலா கேட்டால், பட்டர் சிக்கன் தரலாமா? ‘பன்னீர் ரேட்டுல சிக்கன் கிடைச்சா நல்லதுதானே, சத்தம் போடாம வாங்கிச் சாப்பிடலாமுல்ல...’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அது சைவ ஆசாமி என்றால் கொதித்து விட மாட்டாரா?

அப்படித்தான் புனேயில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. புனேயில் சண்முக் தேஷ்முக் என்ற வழக்கறிஞர் வசிக்கிறார். நாக்பூர் உயர்நீதிமன்றக் கிளையில் பிராக்டீஸ் செய்து வருகிறார். இவர் முழு சைவம் சாப்பிடுபவர். கடந்த வாரம் இவர் ஜொமோட்டோ மூலமாக ஒரு பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு பட்டர் சிக்கன் மசாலா கொண்டு வந்து கொடுத்து விட்டார்கள். அவரும் அதை அறியாமல், ருசித்து சாப்பிடத் தொடங்கினார். பாதி சாப்பிடும் போது அவருக்கு சந்தேகம் ஏற்படவே கண்டுபிடித்து விட்டார்.

வழக்கறிஞர் அல்லவா? கோபம் சற்று அதிகமாகவே வந்தது. சத்தம் போட்டிருக்கிறார். அதற்கு ஜொமேட்டாவும், பிரீத் பஞ்சாபி தாபா ஹோட்டலும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். பணத்தையும் ரீபண்ட் செய்திருக்கிறார்கள். ஆனாலும், வழக்கறிஞர் தேஷ்முக் விடவில்லை. ெஜாமோட்டோ மீதும், ஹிஞ்சேவாடியில் உள்ள பிரீத் பஞ்சாபி தாபா மீதும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சைவம் சாப்பிடும் அவருக்கு அசைவம் கொடுத்தது தவறு என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜொமோட்டாவும், அந்த ஹோட்டலும் இணைந்து தேஷ்முக்கிற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என்றும், இது தவிர தேஷ்முக் மனஉளைச்சலுக்காக தனியாக ரூ.5 ஆயிரம் தர வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

நான் இனிமே பேபி சாரா இல்லை
More News >>