சுவையான நெல்லிக்காய் சாதம் ரெசிபி
சூப்பரான சுவையில் நெல்லிக்காய் சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 2
சாதம் - 2 கப்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - பாதி
நறுக்கிய பச்சை மிளகாய் 2
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
இஞ்சி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் நெல்லிக்காயை நன்றாக துருவிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
கடைசியாக, துருவிய நெல்லிக்காய் சேர்த்து கலந்து மூடி போட்டு ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
பின்னர், வெள்ளை சாதம் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி..!