துப்பாக்கியால் சுட்டு செய்தி வாசிப்பாளர் கொலை பாகிஸ்தானில் பயங்கரம்
பாகிஸ்தானில் மர்மநபர்களால் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு செய்தி வாசிப்பாளர் மீதும் குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.
பாகிஸ்தானில் போல் நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர்் முரீத் அப்பாஸ். கராச்சியில் காயாபான் புகாரி பகுதியில் நேற்றிரவு(ஜூலை 9), மர்ம நபர்கள், அப்பாஸை தேடி வந்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர் . அப்போது அவருடன் இருந்த மற்றொரு செய்தி் வாசிப்பாளர் கிஸார் ஹயத் மீதும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.
இருவரும் உடனடியாக ஜின்னா முதுகலை மருத்துவ மைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையின் இயக்குனர் சீமிர் ஜமாலி கூறுகையில், ‘‘அப்பாஸ் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்திருந்ததால், மருத்துவமனைக்கு ெகாண்டு வரும் முன்பே அவர் இறந்து விட்டார். ஹயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
சம்பவம் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. ஷார்ஜில் கரால் கூறுகையில், ‘‘அப்பாஸுக்கு சிலருடன் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். எனவே, சம்பவத்திற்கு செய்தி தொடர்பான காரணம் இருக்காது. தனிப்பட்ட விரோதம்தான் காரணமாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.
லோன் தர்றியா, சுட்டுத் தள்ளவா? பீதியில் பீகார் வங்கி அதிகாரிகள்