உலக கோப்பை அரையிறுதி... வெற்றிக்கு 240 ரன் இலக்கு..! இந்தியா அதிர்ச்சி தொடக்கம்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி, நேற்று மழையால் தடைபட்ட நிலையில் இன்று போட்டி விடுபட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டரில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நேற்று நடைபெற்றது.46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் என்ற நிலையில் இன்று ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இதனால் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித், ராகுல், கோஹ்லி ஆகியோர் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா தடுமாறி வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதலாவது அரையிறுதிப் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. ஆட்ட நேரம் முடியும் வரை மழை நீடித்ததால், ரிசர்வ் நாளான இன்று போட்டி விடுபட்ட இடத்திலிருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு காலை முதலே அங்கு சூரியன் பிரகாசமாக சுட்டெரிக்க ரசிகர்களும் நிம்மதியடைந்து, உற்சாகமானார்கள்.46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி எஞ்சிய 3.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து கூடுதலாக 28 ரன்கள் மட்டுமே கூடுதலாக சேர்த்து 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன் எடுத்தது.
240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கேப்டன் கோஹ்லி ஆகியோர் தலா ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்க 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இந்திய அணி. இதனால் இந்தியா வெற்றி பெறுமா? என்ற சந்தேகத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி.. இந்திய பந்து வீச்சில் நியூசி.திணறல்