சீனாவில் ஒரு நாளைக்கு 50ஆயிரம் பேருக்கு வேலை என்ன செய்கிறார் மோடி? - ராகுல் கேள்வி

ஆண்டுதோறும் புதிதாக 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 3 நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், திங்கட்கிழமையன்று காலை ராய்ச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “சீனா 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை தருகிறது. ஆனால், பிரதமர் மோடி அரசு 24 மணி நேரத்தில் 450 பேருக்குத்தான் வேலை தருகிறது என்றால், ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தருவதாக பிரதமர் மோடி கூறியிருந்தாரே, அது உண்மையில்லையா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சிந்தானூர் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது; ஆனால் இனிமேல் அவர் செய்யப்போவதைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, இதுவரை செய்ததைப் பற்றி எதையும் சொல்லமுடியவில்லை; அவர் ஆட்சி காலத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும்.

தொழிலதிபர்கள் கோரிக்கை வைத்த 24 மணி நேரத்தில் ரூ.1.5 லட்சம் கோடியை பிரதமர் தள்ளுபடி செய்தி ருக்கிறார். ஆனால் அவரால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியவில்லை” என்றும் சாடினார்.

More News >>