என் உயிருக்கு ஆபத்து பாஜக எம்.எல்.ஏ. மகள் வெளியிட்ட அலறல் வீடியோ
உத்தரப்பிரதேச மாநிலம், பெய்ரேலி மாவட்டம், பிதாரி செயின்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ரா, பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். இவரது மகள் சாக்ஷி மிஸ்ரா(23), வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். அவர் தற்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், சாக்ஷி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், தான் அஜிதேஷ் குமார்(24) என்ற தலித் வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் தனது தந்தை, சகோதரர் மற்றும் அவர்களது அடியாட்கள் மூலம் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பேசியிருக்கிறார்.
இன்னொரு வீடியோவில், பெய்ரேலி மாவட்டத்தில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் தனது தந்தைக்கு உதவக்கூடாது என்றும் தங்்கள் உயிருக்கு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.
இந்த 2 வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து, பெய்ரேலி டி.ஐ.ஜி.யான ஆர்.ேக.பாண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அந்த பெண்ணும், அவரது காதலரும் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.
சமீப காலமாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அந்த கட்சியின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் ஏதாவது சர்ச்சையில் சிக்கி, கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ. ஆகாஷ் வர்கியா, நகராட்சி அலுவலரை கிரிக்கெட் பேட்டால் அடித்தார், உ.பி.யில் ஆக்ரா எம்.பி. ராம்சங்கர் கத்தாரியாவின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டது, உத்தரகாண்டில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குடிபோதையில் துப்பாக்கியுடன் டான்ஸ் ஆடியது என்று வரிசையாக வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
டோல் பிளாசாவில் தகராறு; துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய பாஜக எம்.பி.யின் பாதுகாவலர்