அத்திவரதரை குடும்பத்தினருடன் தரிசனம் செய்த விஜயகாந்த்

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதரை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், குடும்பத்தினருடன் சென்று இன்று தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் கடந்த 1-ந்தேதி விமரிசையாக தொடங்கியது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 40 நாட்கள் காட்சியளிக்கும் அத்தி வரதரை தரிசிக்க, பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.கடந்த 10 நாட்களில் மட்டும் 18 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதர் உற்சவத்தின் 11-வது நாளான இன்று ஆனி கருட சேவை நடைபெறுவதால் அத்திவரதரைக் காண நீண்ட வரிசையில் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் காத்துள்ளனர். இதனால் அத்தி வரதர் தரிசனம் கிடைக்க பல மணி நேரமாவதால், பக்தர்களுக்கு சிறப்பு வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட விவிஐபிக்களும் வருகை தரவுள்ளனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தனர். விஜயகாந்த்தை கட்சி நிர்வாகிகள் கைத்தாங்கலாக பிடித்தபடி சிறப்பு வழியில் அழைத்துச் சென்று அத்திவரதரை தரிசனம் செய்ய வைத்தனர்.அப்போது, விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்திற்காக அத்திவரதரிடம் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அத்திவரதரை 40 ஆண்டுக்கு பின் குளத்தில் இருந்து எடுப்பது ஏன்?
More News >>