இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய வெடிகுண்டால் லண்டன் விமான நிலையம் மூடல்

தேம்ஸ் நதிக்கரையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி லண்டன் விமான நிலையம் மூடப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

லண்டன் நகர விமான நிலையத்தின் அருகே தேம்ஸ் நதியில் உள்ள ஜார்ஜ் வி டாக் என்ற கப்பல் கட்டும் தளத்தில் நேற்று பணிகள் நடைபெற்றபோது, இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்திய வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1,100 பவுண்ட் எடையுள்ள அந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் இருந்தது.

இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் நகர விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அருகில் உள்ள சில சாலைகளும் மூடப்பட்டன. பயணிகள் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தகவல் அனுப்பினர்.

சிறப்பு அதிகாரிகள் மற்றும் கடற்படை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் வெடிகுண்டு இன்னும் செயலில் இருப்பது தெரிய வந்ததால் பாதுகாப்பு கருதி லண்டன் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. வெடிகுண்டை கைப்பற்றிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாதவகையில், அதை செயலிழக்கச் செய்தனர்.

More News >>