அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி வருகை 1 to 5 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை

அத்தி வரதரை தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வருகிறார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இந்த முறை கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.அத்தி வர தரை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.கடந்த 11 நாட்களில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதர், 40 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிலையில், நாட்டின் முக்கியப் பிரபலங்கள் பலரும் காஞ்சிக்கு படையெடுத்து வருகின்றனர்.

நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் திரைப்படம் வெற்றி பெறவேண்டி பூஜை செய்தார். இது போல் அரசியல் பிரமுகர்கள் பலரும் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிற்பகல் 3 மணிக்கு அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வருகிறார். அவரது வருகையையொட்டி, சென்னை விமான நிலையம் முதல் காஞ்சிபுரம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் குடியரசுத் தலைவரின் வருகையால், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று பகல்1 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்திவரதர் தரிசனத்திற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வரும் நிலையில், பிரதமர் மோடி வரும் 23-ந் தேதி காஞ்சிபுரம் வருகை தரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின் நூறுகோடி சொத்துக்களை ஏலம் விட ஐ.ஓ.பி. வங்கி நோட்டீஸ்
More News >>