கிரிக்கெட் சங்க இயக்குநரானார் இந்திரா நூயி!
சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் முதல் சுதந்திர பெண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்திரா நூயி.
உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் குளிர்பான நிறுவனமாகத் திகழ்வது பெப்சிகோ நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இந்திரா நூயி.
சர்வதேச அளவில் பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் எப்போதுமே டாப் லிஸ்டிலேயே நீடித்து வருகிறார். இந்திய அமெரிக்கரான இந்திரா நூயி தற்போது சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் முதல் சுதந்திர இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திரா நூயி, சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் இயக்குநராக வருகிற ஜூன் மாதம் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைகள் கடந்த ஜூன் மாதம் முதல் அலோசிக்கப்பட்டு தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது.