சத்தான வெள்ளை எள் மிட்டாய் ரெசிபி
உடலுக்கு நன்மைத் தரும் வெள்ளை எள் கொண்டு மிட்டாய் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
வெள்ளை எள் - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
முதலில், வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எள் சேர்த்து சுமார் 3 நிமிடங்களுக்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும், வெல்லம், ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து பதம் வரும் வரை கரைத்து பாகு தயாரித்துக் கொள்ளவும்.
இந்நிலையில், வறுத்து வைத்து எள் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்துவிடவும்.
இந்த கலவையை பட்டர் பேப்பரில்போட்டு சமம் செய்துக் கொள்ளவும்.
பிறகு, வெண்ணெய் தடவிய கத்தியில் சதுர வடிவில் வெட்டி சில நிவீடங்களுக்கு பின்னர் எடுத்து பரிமாறவும்.
சத்த நிறைந்து வெள்ளை எள் மிட்டாய் ரெடி..!
சுவையான கோதுமை ரவை பாயாசம் ரெசிபி