மிசேலின் அழகு மிளிர்கிறது- காதல் மனைவியின் ஓவியத்தைப் புகழ்ந்த ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிசேல் ஒபாமாவின் ஓவியங்களை அமெரிக்க அதிபர்களுக்கான ஓவியக் கண்காட்சியில் ஒபாமா திறந்து வைத்தார்.

அமெரிக்க அதிபர்களின் அதிகாரப்பூர்வ ஓவியங்கள் அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் அரங்கத்தில் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். இந்த வகையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிசெல் ஒபாமாவின் ஓவியங்களைக் காட்சிப்படுத்துவதற்காக ஒபாமாவால் இரண்டு ஓவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒபாமாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லே மற்றும் ஷெரால்டு ஆகிய இருவரும் அமெரிக்க அதிபர்களை காட்சிப்படுத்திய முதல் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஓவியர்களாயினர். காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்களை நேற்று ஒபாமா மற்றும் அவரது மனைவி மிசேல் ஆகியோர் திறந்துவைத்துப் பார்வையிட்டனர்.

அப்போது ஒபாமா பேசுகையில், "ஓவியங்கள் மிகச் சிறப்பாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனது ஓவியம் அருமையாக உள்ளது. ஆனால் மிசேலின் அழகு மிகவும் அற்புதமாக இந்த ஓவியத்தில் வெளிப்பட்டுள்ளது.

மிசேலின் அழகு, அறிவு, வசீகரம் அத்தனையும் இந்த ஓவியத்தில் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது" எனத் தன் காதல் மனைவியின் அழகை ரசிகனாகப் புகழ்ந்தார் ஒபாமா.

More News >>