பணம், அதிகாரத்தை கொண்டு ஆட்சிகளை கவிழ்க்கும் பாஜக ராகுல்காந்தி குற்றச்சாட்டு
‘பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநில ஆட்சிகளை கவிழ்க்கும் வேலையில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. நாங்கள் உண்மைக்காக போராடுகிறோம்’’ என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஆஜராவதற்காக வந்திருந்த ராகுல்காந்தி, அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பா.ஜ.க.விடம் பணம் இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது.
பணம் மற்றும் பலத்தால் மாநில ஆட்சிகளை கவிழ்க்கும் வேலையை அந்த கட்சி செய்கிறது. முதலில் கோவாவில் செய்தார்கள். அடுத்து வடகிழக்கு மாநிலங்களில் செய்தார்கள். இப்போது கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களை பணத்தால் இழுக்கின்றனர்.
இதுதான் உண்மையான நிலவரம். உண்மைக்காக காங்கிரஸ் போராடுகிறது. உண்மைதான் காங்கிரசை மேலும் பலமானதாக மாற்றுகிறது’’ என்று கூறினார்.