ஈசியா செய்யலாம் வெண்ணிலா ஸ்பாஞ் கேக் ரெசிபி
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
பொடித்த சர்க்கரை - ஒரு கப்
மைதா - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - கால் கப்
வெண்ணிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு - கால் டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அதில், பொடித்த சர்க்கரை சேர்த்து கட்டி இல்லாமல் கலந்துக் கொள்ளவும்.
அத்துடன், மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நைசாக கரைத்துக் கொள்ளவும்.
பின்னர், உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கியதும், வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.
சூரு கேக் பேன் எடுத்து அதில் வெண்ணெய் தடவி, அதன்மேல் ஒரு ஸ்பூன் மைதா மாவு போட்டு அனைத்து பக்கமும் பரப்பி விடவும்.
பின்னர், இதன் மீது கலவையை ஊற்றவும்.
வாணலியை அடுப்பில் வைத்து 2 டேபிஸ் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஒரு ஸ்டான்ட் வைத்து, அதன்மீது கேக் பேன் வைத்து மூடிப்போட்டு வேகவிடவும்.
அவ்ளோதாங்க.. சுவையான வெண்ணிலா ஸ்பாஞ் கேக் ரெடி..!
சூப்பர் ஸ்னாக் உருளைக்கிழங்கு லாலிபாப் ரெசிபி