ரஜினியுடன் மோதும் 3 பாலிவுட் நடிகர்கள்!
தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக மூன்று பாலிவுட் நடிகர்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காலா படத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் ரஜினிக்கு வில்லனாக நடித்த்தார் அடுத்து வந்த 2.0 திரைப்படத்தில் பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். கடந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட படத்தில் பாலிவுட் நாயகன் நவாசுதின் சித்திக் வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தர்பார் படத்திலும் ரஜினிக்கு பாலிவுட் நடிகர்களே வில்லனாக நடித்து வருகின்றனர். ஆனால், இம்முறை மூன்று பெரிய பாலிவுட் நடிகர்கள் ரஜினிக்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.
டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த பாகி 2 படத்தின் வில்லன் பிரதீக் பாபர், 12 பி படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மற்றும் சல்மான் கானின் டைகர் ஜிந்தகி படத்தில் வில்லனாக நடித்திருந்த நவாப் ஷா என மூன்று வில்லன்கள் நடித்து வருகின்றனர்.
சந்திரமுகி, சிவாஜி, குசேலன் படங்களை தொடர்ந்து ரஜினியுடன் நான்காவது முறை நயன்தாரா இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நடந்திருக்கவே கூடாது; நடிகர் சங்கம் மீது ரஜினி கோபம்