ஜூலை 18 வரை நோட் 7எஸ் உள்பட ரெட்மி போன்களுக்கு தள்ளுபடி
ஸோமி நிறுவனத்தின் தயாரிப்பான ரெட்மி போன்கள் பலவற்றுக்கு சிறப்பு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை ரெட்மி 6, ரெட்மி ஒய்3, ரெட்மி ஒய்2, ரெட்மி நோட் 7எஸ் மற்றும் மி ஏ2 ஆகிய ஸ்மார்ட்போன்களை சிறப்பு விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
இது தற்காலிக சிறப்பு விலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் மி.காம் தளங்களில் சிறப்பு விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். ஹெச்டிஎஃப்சி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.ரெட்மி நோட் 7எஸ்
சிறப்பு தள்ளுபடி விற்பனை காலத்தில் 3 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட ரெட்மி நோட் 7 எஸ், ரூ.9,999/- விலையிலும் 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி கொண்ட போன் ரூ.11,999/- விலையிலும் கிடைக்கும்.
ரெட்மி 6
கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 6 ஸ்மார்போனின் 3 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட தயாரிப்பு ரூ.6,999/- விலையில் கிடைக்கும்.
ரெட்மி ஒய்2
ரெட்மி ஒய்2 ஸ்மார்ட்போனும் கடந்த ஆண்டுதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சிறப்பு தள்ளுபடி விலையில் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட ரெட்மி ஒய்2, ரூ.8,999/- விலையில் விற்பனையாகிறது. இதுதான் இந்தியாவில் ரெட்மி ஒய்2 போனின் அதிகப்பட்ச குறைந்த விற்பனை விலையாகும்.
ஸோமி மி ஏ2
4 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட மி ஏ2 ரூ.8,999/- விலையிலும், 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ரூ.10,999/- விலையிலும் விற்பனையாகிறது.
ரெட்மி ஒய் 3
3 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட ஒய் 3 போன் ரூ.8,999/- விலையிலும், 4 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ரூ.10,999/- விலையிலும் விற்பனையாகிறது.
ஜூலை 18 வரை மட்டுமே இந்த சிறப்பு விற்பனை விலை தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், அதற்குள் வாங்கி பயன்பெறலாம்.
அமேசான் போன் பெஸ்டிவல்: அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்