முட்டை இல்லா மிருதுவான ரவை கேக் ரெசிபி

வீட்டிலேயே சுவையான முட்டை இல்லா ரவை கேக் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ரவை - ஒன்றரை கப்

மைதா மாவு - அரை கப்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

சர்க்கரை - ஒரு கப்

தயிர் - அரை கப்

பால் - ஒரு கப்

வெண்ணிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்

வெண்ணெய் - 100 கிராம்

உப்பு

செய்முறை:

முதலில், ஒரு கிண்ணத்தில் உருக்கிய வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

பிறகு, தயிர், பால், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளவும்.

மற்றொரு கிண்ணத்தில் ரவை, மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

பின்னர், தயாராகவுள்ள வெண்ணெய் கலவையை இத்துடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்துக் கொள்ளலாம்.தற்போது, 350 டிகிரி எப்ல் சூடு செய்து, பிறகு இந்த கலவையை கேக் பேனில் ஊற்றி சமம் செய்து சுமார் 50 நிமிடங்கள்விட்டு வேகவிடவும்.

சுவையான மற்றும் மிருதுவான ரவை கேக் ரெடி..!

ஈசியா செய்யலாம் வெண்ணிலா ஸ்பாஞ் கேக் ரெசிபி
More News >>