தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வேட்டை... லட்சக்கணக்கில் சிக்கிய பணம்

தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவு அனுவலகங்கள் பலவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் பிடிபட்டது.

தமிழகத்தில் லஞ்சப் பணம் அதிகம் புழங்கும் இடங்களில் ஒன்றாகிவிட்டது பத்திரப்பதிவு அலுவலகங்கள். பத்திரப் பதிவு செய்யும் நிலத்தின் உண்மையான மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படச் செய்வதுடன், லஞ்சத்திலும் இந்த அலுவலக அதிகாரிகள் திளைக்கின்றனர். இவர்களுக்கு ஏஜண்டுகளாக பத்திர எழுத்தர்கள் செயல் படுகின்றனர். அன்றாடம் அதிகாரிகளுக்காக வசூல் செய்யும் லஞ்சப் பணத்தை அலுவலக நேரம் முடிந்தவுடன் அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைப்பது வழக்கம்.

லஞ்சப் பணம் அதிகம், புழங்கும் முக்கிய பத்திரப் பதிவு அலுவலகங்களை கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், நேற்றிரவு தமிழகத்தின் பல இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையின்போது ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 700 ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இதே போல் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில் 70 ஆயிரம் ரூபாயும்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த சோதனையில் 43 ஆயிரம் ரூபாயும் சிக்கியது.

இது போன்று நாமக்கல், செஞ்சி, குன்னூர், அரியலூர், மதுரை மாவட்டம் செக்கானூரணி ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று, கணக்கில் வராத லட்சக்கணக்கிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களின் அதிகாரிகளிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி வருகை ; 1 to 5 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை
More News >>