அட்டகாசமான மதிய உணவு கேரட் சாதம் ரெசிபி
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரட் சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
கேரட் - 100 கிராம்
சாதம் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
உளுந்தப் பருப்பு - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 1
துருவிய தேங்காயம் - ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில், எண்ணெய்விட்டு சூடானதும், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து, பிரியாணி இலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். கூடவே கறிவேப்பிலை சேர்க்கவும்.
பின்னர், துருவிய கேரட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வேகவிடவும்.கேரட் வெந்ததும், அரைத்து வைத்த மசாலா சேர்த்து கிளறி வதக்கவும்.இந்நிலையில், சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான கேரட் சாதம் ரெடி..!