பட்டம், பரிவட்டம் கட்டி பிரபல மதுரை ரவுடிக்கு முதல் மரியாதை அத்தி வரதர் தரிசனத்தில் நடந்த கூத்து
மதுரை வரிச்சியூர் செல்வம்... கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வெட்டு, குத்து. அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான இந்த மதுரை ரவுடியை தெரியாத போலீசார் யாரும் இருக்க முடியாது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த ரவுடியின் பெயர் தமிழகம் முழுக்க வே பிரபலம். பல முறை சிறையில் பிடித்துப் போட்டாலும் எளிதில் வெளியில் வந்து விடுவார். குண்டர் சட்டம் கூட இவர் மீது பாய்ந்தது.ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட்டில் சொகுசு காரில் பயங்கர ஆயுதங்களுடன் எப்போதும் உலா வருபவர்.அரசியல் புள்ளிகள் மட்டுமின்றி காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆசீர்வாதமும் இவருக்கு உண்டு.
இந்த ரவுடிக்கும், அவருடைய குடும்பத்தினர் மற்றும் கைத்தடிகளுக்கும் காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்திற்கு ஏக தடபுடல் மரியாதை செய்தது இப்போது சர்ச்சையாகி உள்ளது.அத்திவரதர் சன்னதி முன் இவர்களை அமர வைத்து பட்டம், பரிவட்டம் கட்டி,கோயில் நிர்வாகத்தினரும், அர்ச்சகர்களும் விவிஐபிக்களுக்கு கொடுக்கும் முதல் மரியாதை கொடுத்து கவுரவித்துள்ளனர். இந்தக் காட்சிகளுடன் கூடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி, கோயில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பில் இருந்த போலீசாரை ஏகத்துக்கும் விமர்சனத்துக்கு ஆளாக்கியுள்ளது.
ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் காஞ்சிபுரம் அத்தி வர தரை கடந்த 1-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.தினமும் லட்சக்கணக்கானோர் நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால்கடுக்க காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். ஆனால் ரவுடி வரிச்சியூர் செல்வமும், குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளோ விவிஐபி பாஸ் பெற்று முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் எந்த சிரமமும் இன்றி சென்று தரிசனம் செய்துள்ளார். கொலை, கொள்ளை, வழிப்பறி என ஊரறிந்த ஒரு ரவுடிக்கு இத்தனை மரியாதையா? என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் ரவுடிக்கு விவிஐபி பாஸ் மற்றும் தரிசனம் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்த கருப்பு ஆடு யார்? என்பது குறித்து இப்போது பெரும் விவாதமே நடந்து வர, போலீஸ் உயர் அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
அத்திவரதரை குடும்பத்தினருடன் தரிசனம் செய்த விஜயகாந்த்