ட்விட்டரில் பிரியங்கா காந்தி வெளியிட்ட திருமண படம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சேலை காஸ்ட்யூம் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகமான ட்விட்டரில் கடந்த திங்கட்கிழமை முதல் #SareeTwitter என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நடிகை நக்மா, சேலையில் தான் உள்ள படத்தை வெளியிட்டு, ‘‘சேலை இந்திய கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் காட்டுகிறது. சேலை காஸ்ட்யூம் செக்சியான காஸ்ட்யூம் என்று சொல்லலாம். சேலையில்தான் ஒரு பெண், அழகாகவும், கம்பீரமாகவும் காட்சி தருகிறார்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது தான் சேலை கட்டி, நாணத்துடன் அமர்ந்திருந்த புகைப்படத்தை இந்த ஹேஸ்டேக்கில் வெளியிட்டுள்ளார். ‘‘22 ஆண்டுகளுக்கு முன்பு எனது திருமணத்தன்று காலை பூஜையில்...’’ என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரியங்கா காந்தி, ராபர்ட் வத்ராவை 1997ம் ஆண்டில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். டெல்லியில் ஜன்பத் சாலையில் சோனியாகாந்தி வீட்டில் இந்த திருமண வைபவம் நடைபெற்றது. அரசியலுக்கு வராமல் ஒதுங்கியே இருந்த பிரியங்கா காந்தி கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஜனவரி 23ம் தேதி அரசியலில் குதித்தார். தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

அதிகார மமதையில் பா.ஜ.க; பிரியங்கா காந்தி தாக்கு
More News >>