அப்பா, அம்மா சண்டை தாங்க முடியலே சாக அனுமதி கேட்ட சிறுவன்
பீகாரைச் சேர்ந்த சிறுவன் தனது அப்பா, அம்மா சண்ைடயை தாங்க முடியாமல், சாக அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், பகல்பூர் மாவட்டம், கஹால்கயான் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தற்போது ஜார்கண்ட் மாநில அரசில் ஊரக வளர்ச்சித் துறையில் மேலாளராக இருக்கிறார். இவரது மனைவி, பாட்னாவில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராக உள்ளார். இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். கணவர் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக மனைவியும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் உள்ளதாக கணவரும் பிரச்னை ஏற்படுத்தி சண்டை போட்டுள்ளனர்.
இவர்களின் ஒரே மகனுக்கு 15 வயதாகிறது. இந்த சிறுவன் முதலில் பாட்னாவில் தனது தாயாருடன் இருந்து படித்திருக்கிறான். தற்போது தந்தையுடன் ஜார்கண்டில் தங்கி படித்து வருகிறான். தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட சண்டையில், தாயின் உறவினர்கள் தந்தையை மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுவன் கடந்த மாதம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளான்.
அதில், தனது பெற்றோர் சண்டையால் மன உளைச்சல் ஏற்ப்டடு தனது படிப்பு பாதித்து விட்டதாக கூறியுள்ளான். மேலும், புற்றுநோய் பாதித்த தனது தந்தைக்கு தாயின் உறவினர் நிறைய தொல்லை கொடுப்பதாகவும் கூறியுள்ள சிறுவன், தனக்கு வாழப் பிடிக்காததால் சாக அனுமதி வேண்டும் என்றும் கடிதத்தில் கூறியிருக்கிறான்.
இந்த கடிதத்தை பெற்ற ஜனாதிபதி அலுவலகம் அதை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறது. பிரதமர் அலுவலகம் அந்த கடிதத்தை பகல்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை நடத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறது. மாவட்ட அதிகாரிகள், தாயிடம் விசாரணை நடத்தவே இந்த விஷயம் தற்போது வெளியில் தெரிந்துள்ளது. இது அந்த வங்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனங்கள் ரத்து; புதிய திட்டம் தயார்