சின்ன எம்.ஜி.ஆர். தமிழகத்தை வழிநடத்துவார் - கர்நாடக மா.செ. புகழேந்தி பேச்சு
சின்ன எம்.ஜி.ஆர் இங்கே வர போகிறார். தமிழகத்தை டிடிவி வழிநடத்துவார் என்று கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணி சார்பில் நீட் தேர்வுக்கு நிரந்த தீர்வு கோரி திருச்சியில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர் ‘’இன்னும் கொஞ்ச நேரத்தில் சின்ன எம்.ஜி.ஆர் இங்கே வர போகிறார். தமிழகத்தை டிடிவி வழிநடத்துவார். இந்த இயக்கத்தை காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்ய தயார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேருக்கு நன்றி.
இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன தவறு செய்தார்கள். கொறடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்தார்களா இல்லையே. இவ்வளவு கேவலமாக காரணமே இல்லாமல் பதவி நீக்கம் செய்துள்ளார். விசுவாசத்தை தூக்கி எறிந்து விட்டார்கள்.
கொறடா உத்தரவை மீறிய அவர்கள் தலைமையிலான உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். மாறாக எங்களை பதவி நீக்கம் செய்திருக்கிறார்கள். ஊழலாட்சி செய்கிறவருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக நீக்கப் பட்டோம்.
அனைவரும் எட்டப்பனை மிஞ்சியவர்கள். தைரியம் இருந்தால் டிடிவியோடு மோதிக் கொள்ளுங்கள். சிறைக்கு சென்ற சசிகலா என்றாவது யாரையாவது தவறாகப் பேசியது உண்டா? உங்களுக்கு பாடம் புகட்டும் நாள் விரைவில் வரும்” என்றார்.
சசிகலா, 18 எம்.ல்.ஏ.க்கள், தகுதி நீக்கம், கர்நாடகா மாநிலச் செயலாளர், புகழேந்தி, அதிமுக அம்மா, Sasikala, 18 MLAs, disqualified, Karnataka State Secretary, Pugalenthi, AIADMK AMMA