இது மழை நீர் அல்ல.. தாகம் தீர்க்கும் குடிநீர்..! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீண்

மதுரையில் குடிநீருக்காக பொதுமக்கள் அல்லாடும் வேளையில், குடிநீர் கொண்டு வரும் ராட்சத குழாய் உடைந்து, மழை வெள்ளம் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகாரிகளும் அடைப்பை சரி செய்வதில் அலட்சியம் காட்ட, குடிநீர் வீணாவதைக் கண்டு, மதுரை மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் சரித்திரம் காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மழையும் பொய்த்து, ஏரி குளங்களும் வறண்டதால் குடிநீருக்கே மக்கள் அல்லாடி, பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு குடம் குடிநீருக்காக பல மணி நேரம் காத்துக் கிடக்கும் அவலம் நிலவுகிறது.பல இடங்களில் கூடுதல் விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரு நகரமாக திகழும் மதுரைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது வைகை ஆற்றுப்படுகையும், வைகை அணையும் தான். வைகை ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளை போனதால், ஆழ்துழாய் கிணறுகள் இப்போதைக்கு வைகை அணையிலிருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் தான் 10, 15 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படுகிறது.

அவ்வாறு ராட்சத குழாய்களில் கொண்டு வரப்படும் குடிநீர் குழாயில், மதுரை கோச்சடை முடக்கு சாலை அருகே உடைப்பு ஏற்பட்டது. இதனால் நல்ல தண்ணீர் குழாய் உடைந்து சாலையில், மழை நீர் வெள்ளம் போல் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது.மதுரையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் இந்த நேரத்தில், 2 நாட்களாக இப்படி வீணாக தண்ணீர் செல்வதை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

'எங்க ஊர்ல இருந்து சென்னைக்கு தண்ணி தரக் கூடாது' - துரைமுருகனின் எதிர்ப்பால் திமுகவுக்கு சங்கடம்
More News >>