பிஎஸ்என்எல் லேண்ட்லைன்: தினமும் 5 ஜிபி டேட்டா இலவசம்!
பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பு வாடிக்கையாளர்கள் ஜூலை 31ம் தேதி வரைக்கும் தினமும் 5 ஜிபி என்ற அளவில் கட்டணமில்லாத டேட்டா சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த மார்ச் மாதம் கட்டணமில்லாத டேட்டா சேவையை பரீட்சார்த்த முறையில் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்தது. அதன்படி பிஎஸ்என்எல் லேண்ட்லைன் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தினமும் 5 ஜிபி வரைக்குமான டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். 5 ஜிபி வரைக்கும் 10 Mbps வேகத்தில் கிடைக்கும் டேட்டா, 5 ஜிபி பயன்பாட்டை தாண்டினால் 1 Mbps வேகத்திற்குக் குறைந்து விடும். இடையில் நிறுத்ததி வைக்கப்பட்டிருந்த இந்தச் சேவை தற்போது ஜூலை 31ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபார் பகுதியை தவிர்த்து நாட்டின் அனைத்துப் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் இச்சேவை கிடைக்கும். இது சோதனை முயற்சிக்கான சலுகை என்பதால் இதை நிறுவுவதற்கோ, பிணையமாகவோ எந்தத் தொகையும் செலுத்த வேண்டியதில்லை. வாடிக்கையாளர்கள் சொந்தமாக மோடம் (modem) வைத்திருந்தால் போதுமானது.
5 ஜிபி பரீட்சார்த்த சலுகைக்கு பதிவு செய்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு இலவச டேட்டா கிடைக்கும். இந்தச் சலுகையை பயன்படுத்துவோருக்கு 1 ஜிபி சேமிப்பளவு கொண்ட மின்னஞ்சல் முகவரி ஒன்றும் வழங்கப்படுகிறது. பரீட்சார்த்த காலம் முடிந்த பிறகும் இதற்கான பதிவை ரத்து செய்யாத வாடிக்கையாளர்கள் தற்போது இருக்கும் அகன்ற அலைக்கற்றை திட்டங்களுக்கு மாற்றப்படுவார்கள்.