வேலூர் தொகுதி தேர்தல்: அதிமுக பொறுப்பாளர்கள்
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தல் பணியாற்ற அமைச்சர்கள் தலைமையில் மொத்தம் 209 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், திமுகவில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணி பொறுப்பாளர்களாக டி.ஆர்.பாலு எம்.பி., ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், முத்தமிழ்செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு முன்னாள் அமைச்சர் தலைமையில் வார்டு வாரியாக பொறுப்பாளர்கள் என்று மொத்தம் 70 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, அதிமுகவில் அதை விட அதிகமாக 209 பேரை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். அவர்கள், அமைச்சர் கே.சி. வீரமணி, ரவி எம்.எல்.ஏ ஆகியோர் மேற்பார்வையில் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் தங்கமணி, வேலூர் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையன், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் வேலுமணி, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் தேர்தல் பணிக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அதிமுகவுக்கு கவுரவப் பிரச்னை; வேலூரில் வெற்றி பெறுமா திமுக?