கடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம் ரசிகர்கள் ஆரவாரம்
சீயான் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து விக்ரம் பார்த்தார்.
கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படம் கடாரம் கொண்டான். இதில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘தூங்காவனம்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருக்கும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசனும், நாசரின் மகன் அபிஹசனும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு, பிரவீன் கே.எல். படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். படத்திற்கு இசை ஜிப்ரன். இதனை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி சண்டைக் காட்சிகளை தயாரித்த விதம் குறித்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்க்காக விக்ரம் தனது மகன் துருவ்வை அழைத்து கொண்டு அதிகாலையிலேயே சென்னை ஈக்காடுதங்கலில் உள்ள காசி தியேட்டருக்கு வந்தார். முதல் நாள் முதல் காட்சியை அவர்கள் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தனர்.
நாளைக்கு 6 படங்கள் ரிலீஸ்! ஜெயிக்கப்போவது யாரு?