சத்தான டயட் சூப் ரெசிபி..
சத்தான டயட் சூப் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..
சமைக்க தேவையானவை
வெள்ளை வெங்காயம் - 3 செலரி - ஒரு கட்டு குடை மிளகாய் - 2 முட்டைக்கோஸ் - அரை கிலோ தக்காளி - 3 உப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - தேவையான அளவு
உணவு செய்முறை
ஸ்டெப் 1:
முதலில் காய்கறிகள் அனைத்தையும் நன்கு கழுவி, மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும். (அல்லது) ஃபுட் ப்ராசசரில் போட்டுப் பொடியாகும் வரை ஓடவிட்டு எடுக்கவும்.
ஸ்டெப் 2:
நறுக்கிய காய்கறிகளை குக்கரில் போட்டு 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். 5, 6 விசில் வரவிட்டு இறக்கிவிடவும். அதனுடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து, பவுலில் ஊற்றி சூடாகப் பரிமாறவும்.