ட்ரை பண்ணுங்க.. முட்டைகோஸ் மஞ்சூரியன் உருண்டை ரெசிபி

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் முட்டைகோஸ் கொண்டு சுவையான மஞ்சுரியன் உருண்டை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் - 3 கப்

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

மிளகு - அரை டீஸ்பூன்

நறுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி

நறுக்கிய பூண்டு - ஒரு தேக்கரண்டி

சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி

மைதா - 2 மேசைக்கரண்டி

சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் சாஸ் - ஒரு டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

வெங்காயத்தாள்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் முட்டை கோசை பொடியாக நுறுக்கி ஒரு கிண்ணத்தில் போடவும்.

அத்துடன், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு, சோள மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்.

இந்த உருண்டைகளை எடுத்து 10 நிமிடங்களுக்கு ஃபிரீஜரில் வைத்து எடுக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர், பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கியதும், சோயா சாஸ், சிவப்பு மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், வினீகர், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

இந்த கலவையில், உருண்டைகளை போட்டு நன்றாக கிளறவும்.

இறுதியாக, மிளகுத்தூள், வெங்காயத்தாள் தூவி கிளறி இறக்கவும்.

சுவையான முட்டைகோஸ் மஞ்சூரியன் உருண்டை தயார்.

More News >>