கேம் பூஸ்ட்டுடன் கூடிய ஆப்போ கே3 ஸ்மார்ட்போன் விற்பனை
இளந்தலைமுறையினரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வண்ணம் கேம்பூஸ்ட் 2.0 நிறுவப்பட்ட ஸ்மார்ட்போனை ஆப்போ நிறுவனம் விற்பனை செய்ய இருக்கிறது. திரையின் ஒளியை குறைக்கும் டிசி டிம்மிங், கண்களுக்கு பாதிப்பில்லாமல் காக்கும் ஜெர்மனியின் டியூவி ரெய்ன்லேண்ட் தொழில்நுட்பம் மற்றும் விரைவாக மின்னேற்றம் செய்யக்கூடிய VOOC 3.0 உள்ளிட்ட நவீன வசதிகள் ஆப்போ கே3 ஸ்மார்ட்போனில் உள்ளன.
ஆப்போ கே3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
சிம்கார்டு: இரண்டு நானோ சிம்கார்டுகள்
தொடுதிரை: 6.5 அங்குலம்; எஃப்ஹெச்டி (1080X2340 தரம்), AMOLED; 19.5:9 விகிதாச்சாரம்
இயக்கவேகம்: 6 ஜிபி RAM மற்றும் 8 ஜிபி RAM
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி
பின்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றலுடன் கூடிய சோனி ஐஎம்எஸ்519 முதன்மை காமிரா மற்றும் 2 எம்பி ஆற்றல் கொண்ட மற்றொரு காமிரா
முன்பக்க காமிரா: சோனி ஐஎம்எஸ்471 வகையில் 16 எம்பி ஆற்றல் கொண்ட பாப்அப் தற்பட (செல்ஃபி) காமிரா
பிராசஸர்: ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 710 சிப் ஆன் சிஸ்டம்
மின்கலம்: 3,765 mAh; VOOC 3.0 வேகமான மின்னேற்ற வசதி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை; கலர்ஓஎஸ் 6.0
விலை: 6 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ரூ.16,990 விலையிலும் 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி கொண்ட போன் ரூ.19,990 விலையிலும் கிடைக்கும்.
இரவிலும் மென்பொருளை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கக்கூடிய அல்ட்ரா கிளியர் நைட் வியூ 2.0 தொழில்நுட்பம் கொண்ட ஆப்போ கே3, கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜூலை 23ம் தேதி முதல் அமேசான் தளம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
விரைவாக மாற்றப்படும் ஸ்மார்ட்போன் எது தெரியுமா?