சுவையான வாழைப்பழ அல்வா செய்யலாமா ?
வாயில் வைத்தாலே கரையும் வாழைப்பழ அல்வா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 8
சர்க்கரை - ஒரு கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
பாதாம் - 5
முந்திரி - 5
சோள மாவு - 5 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி வறுத்து தனியாக வைக்கவும்.
அதே வாணலியில் நெய்விட்டு உருகியதும், வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
வாழைப்பழம் பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
ஒரு கிண்ணத்தில் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வாழைப்பழ கலவையுடன் சேர்த்து கிளறவும். இடை இடையே நெய் சேர்க்கவும்.
அல்வா பதத்திற்கு வந்ததும், வறுத்து வைத்து பாதாம், முந்திரியை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறலாம்.
சுவையான வாழைப்பழ அல்வா ரெடி..!