அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த சிக்கன் சாண்விச் ரெசிபி
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன் சாண்விச் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 200 கிராம்
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பூண்டு - 2
நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
குடை மிளகாய் (மஞ்சள், பச்சை) - தலா அரை கப்
இட்டாலியன் சீசனிங் - ஒரு டீஸ்பூன்
மயனீஸ் - அரை கப்
ஆலிவ் எண்ணெய் - 2
வெண்ணெய்
கொத்தமல்லித்தழை
உப்பு
செய்முறை:
முதலில், சிக்கனை கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு அத்துடன் மிளகுத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடிப்போட்டு சுமார் 5 விசில்விட்டு வேகவிடவும்.
வெந்ததும், சிக்கன் துண்டுகளை எடுத்து ஆறவைத்து அதன் சதைகளை மட்டும் பீய்த்து தனியாக எடுத்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து ஆலிவ் எண்ணெய்விட்டு சூடானதும் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக கிளறி பச்சை வாசனை போகும் வரை வேகவிடவும்.
அதனுடன் சிக்கன் துண்டுள், மிளகுத்தூள், உப்பு ஆணீயவற்றை சேர்த்து கிளறவும்.
அதில், சிக்கனை வேகவைத்த தண்ணீர், இட்டாலியன் சீசனிங் சேர்த்து உயர் தீயில் தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
ஒரு கிண்ணத்தில் மயனீஸ், சிக்கன் கலவை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறவும்.
பிரெட் துண்டு எடுத்து அதில் சிக்கன் கலவை வைத்து அதன் மீது மற்றொரு பிரெட் துண்டு வைத்து மூடவும்.
தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய்விட்டு உருக்கி தயாராகவுள்ள பிரெட் வைத்து இரண்டு பக்கவும் சுட்டு சுடச்சுட பரிமாறவும்.
அட்டகாசமான சுவையில் சீக்கன் சான்வெஜ் ரெடி..!