மே.இ.தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் அடுத்தமாத தொடங்க உள்ள நிலையில் ஒரு நாள் , டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட்அணி, அடுத்த மாதம் முதல் வாரம் மே.இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி இன்று மும்பையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடரில் தோனி இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும் மூன்று விதமான கிரிக்கெட்டுக்கும் மீண்டும் விராத் கோஹ்லி கேப்டனாக ச அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல் : விராத் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா,ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், சகால், கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார், ஷமி, சைனி, கலீல் அகமது

டி-20 போட்டிகளுக்கான இந்திய அணி : விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், க்ருனால் பாண்ட்யா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாகர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாகர், நவதீப் சைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் பட்டியல் :விராத் கோஹ்லி C கேப்டன்), ரஹானே, மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, ஹனுமா விகாரி, ரோகித் சர்மா, ரிஷப் பாண்ட், விருதிமான் சகா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, Pant முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

More News >>