நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது கர்நாடக சுயே. எம்எல்ஏக்களின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

கர்நாடகா சட்டப்பேரவையில், குமாரசாமி அரசு இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என சுயேட்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த 3 வாரங்களாக நிலவும் அரசியல் குழப்பம் முடிந்தபாடில்லை. முதல்வர் குமாரசாமி அரசுக்கு எதிராக, ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா விவகாரத்தில் நெருக்கடி முற்றியுள்ளது.

மெஜாரிட்டி இழந்து விட்ட முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று கூறி கடந்த வியாழக்கிழமையே சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் ஆட்சி கவிழ்வது உறுதி என்ற நிலையில் வாக்கெடுப்பு நடத்துவதை தாமதம் செய்து கொண்டே வருகிறார். ஆளுநர் இருமுறை கெடு விதித்தும் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் கர்நாடக அரசியல் நாடகத்தில் நாளும் ஒரு புதிய காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் இன்றும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.இந்நிலையில் அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டு பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த சுயேட்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், சங்கர் ஆகியோர் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

முதல்வர் குமாரசாமி திட்டமிட்டே நம்பிக்கை வாக்கெடுப்பை காலம் கடத்துகிறார். இதனால் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்கெடுப்பு நடத்த கெடு விதிக்க முடியாது என்று கூறி மனுவை நிராகரித்து விட்டது.

ஆளுநர் கெடு முடிந்தது; கர்நாடக சட்டசபையில் வாக்கெடுப்பு தாமதம்..! அடுத்தது என்ன?

More News >>