ஆடி மாத விசேஷ கூழ் செய்யலாமா ?
உடலுக்கு ஆரோக்கியம் தரும் ராகியைக் கொண்டு கூழ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - ஒரு கப்
பச்சரிசி - அரை கப்
தயிர் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 8
உப்பு
செய்முறை:
முதலில் பச்சரிசியை ஒன்றும் பாதியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பச்சரிசி, உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.இந்த மாவை தற்போது, பச்சரிசி கலவையுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்துக் கொண்டே இருக்கவும்.
பச்சரிசியும், ராகியும் வெந்ததும் இறக்கி ஆறவிடவும். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம், தயிர், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
சுடச்சுட கருவாட்டுக் குழம்புடன் கூழ் பருகுவது அமிர்தம்..!