நெறிமுறை மீறல்: எச்சரிக்கும் இன்ஸ்டாகிராம்
சமுதாய வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் கணக்குகள் முடக்கப்படும் சாத்தியம் குறித்த எச்சரிக்கையை இன்ஸ்டாகிராம் அனுப்பி வருகிறது. நெறிமுறைகளை மீறும் உள்ளடக்கம் பற்றிய கொள்கைகளை இன்ஸ்டாகிராம் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. மீண்டும் மீண்டும் கொள்கைகளை மீறும் கணக்குகளை உடனுக்குடன் கண்டுபிடித்து நீக்குவதற்கு புதிய விதிகள் உதவிகரமாக இருக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் துன்புறுத்தும் செய்திகளை தடுக்கிறது. துன்புறுத்தும் மற்றும் தொல்லை தரும் பதிவுகளை கண்டறிந்து அவற்றை பதிவேற்றம் செய்யும் முன்பு எச்சரிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டினை இம்மாத தொடக்கத்தில் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் நிகழ்ந்த நெறிமுறை மீறல்களின் எண்ணிக்கையை பொறுத்து பயனர் கணக்கினை செயல்முடக்கம் செய்வதற்குப் புதிய விதி வழிசெய்கிறது. தற்போது, விதிமுறைகளை மீறும் உள்ளடக்கத்தின் அளவினை பொறுத்து கணக்குகள் செயல்முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இன்ஸ்டாகிராமில் செய்யும் பதிவுகளுக்கு பயனர்களை பொறுப்பேற்க புதிய விதி வழி செய்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறும் உள்ளடக்கம், பின்னூட்டம் மற்றும் பதிவுகள் பட்டியலோடு கணக்கு செயல்முடக்க வாய்ப்பு குறித்த எச்சரிக்கை செய்திகளை இன்ஸ்டாகிராம் தெரிவிக்கும். நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறக்கூடிய நிர்வாணம், ஆபாசம், துன்புறுத்தல், தொல்லை தருதல், வெறுப்புணர்வு, போதை மருந்து விற்பனை, தீவிரவாதம் குறித்த படங்கள் மற்றும் பதிவுகளை பயனர்கள் நீக்குவதற்கும் இன்ஸ்டாகிராம் வாய்ப்பு தருகிறது. மேலும் ஆட்சேபரமான பதிவு என்ற நோக்கில் தவறுதலாக நீக்கப்பட்ட பதிவுகள் மீட்டுருவாக்கம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எங்கெங்கு செல்லினும் செல்ஃபியடா