இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை - அசாம் அரசு அதிரடி உத்தரவு

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலையோ அல்லது உள்ளாட்சி பிரதிநிதி பதவியோ கிடையாது என்று அசாம் அரசு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது.

அசாம் மாநில அரசு புதிய மக்கள் தொகை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அசாம் அரசு இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அசாம் மாநில சுகாதார மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிஸ்வா சர்மா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன் படி இரண்டு குழந்தைகளுக்கு பெற்றால் அரசு ஊழியர் பதவி பறிபோகும். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது. சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்த விதியை மீறினால் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.

மேலும், அரசு நிர்ணயித்த வயதுக்கு முன்னதாக திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

More News >>