அருமையான கத்திரிக்காய் சாதம் ரெசிபி
சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபியான கத்திரிக்காய் சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
சாதம் - ஒரு கப்
கத்திரிக்காய் - கால் கிலோ
தனியா - ஒரு டீஸ்பூன்
மிளகு - கால் டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - முக்கால் டீஸ்பூன்
வர மிளகாய் - 3
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
வெள்ளை எள் - முக்கால் டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
புளி கரைசல் - அரை கப்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை
நல்லெண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் தனியா, மிளகு, கடலைப் பருப்பு, வர மிளகாய், உளுத்தம் பருப்பு, வெள்ளை எள், பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் நல்லெண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, கத்திரிக்ககாயை சேர்க்கவும்.
கத்திரிக்காய் பாதி வெந்ததும் புளி கரைசல், உப்பு சேர்த்து மூடி போட்டு சுமார் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
கத்திரிக்காய் நன்றாக வெந்ததும், சாதம், அரைத்து வைத்த மசாலா சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான கத்திரிக்காய் சாதம் ரெடி..!