அசத்தும் சுவையில் சிக்கன் புலாவ் ரெசிபி

அனைவருக்கும் பிடித்த சிக்கன் புலாவ் ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 300 கிராம்

பாஸ்மதி அரிசி - கால் கிலோ

பெரிய வெங்காயம் - ஒன்று

பிரிஞ்சி இலை - 2

கிராம்பு - 5

பட்டை - 4

சோம்பு - கால் டீஸ்பூன்

ஏலக்காய் - 5

நட்சத்திர கிராம்பு - 2

முந்திரி - 10

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - கால் டீஸ்பூன்

தேங்காய்ப் பால் - ஒரு கப்

புதினா

கொத்தமல்லித்தழை

நெய்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, நட்சத்திர சோம்பு, முந்திரி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இடையே, இஞ்சி பூண்டு விழுதுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதையும் வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பின்னர், சிக்கன் துண்டுகள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி சுமார் 5 நிமிடங்களுக்கு வேகவிடவும்.

சிக்கன் ஓரளவுக்கு வதங்கியதும், கொத்தமல்லி, புதினா, தேங்காய்ப்பால், 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதிவந்ததும், கழுவி சுத்தம் செய்த அரிசி, உப்பு சேர்த்து கிளறி வேகவிடவும்.

அரிசி, சிக்கன் இரண்டும் வெந்ததும் இறுதியாக நெய் சேர்த்து மிதமாக கிளறி இறக்கவும்.

சுவையான சிக்கன் புலாவ் ரெடி..!

More News >>