சுவையான கறிவேப்பிலை தொக்கு ரெசிபி

சுவையான கறிவேப்பிலை தொக்கு ஈசியா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை - 2 கப்

வர மிளகாய் - 35

புளி & எலுமிச்சை அளவு

வெந்தயம் - பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்

கடுகு

நல்லெண்ணெய்

உப்பு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வரமிளகாய் போட்டு வறுத்து எடுக்கவும்.

இது ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு சேர்த்து பொரிக்கவும்.

பின்னர், அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும். இடையிடையே, அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.

தண்ணீர் சுண்டி தொக்கு பதத்திற்கு வந்ததும் வெந்தயம் & பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான கறிவேப்பிலை தொக்கு ரெடி..!

More News >>