ஒரு மாத பரோலில் நளினி விடுவிப்பு சிறையில் இருந்து வெளியே வந்தார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் இருந்த நளினி, ஒரு மாத பரோலில் இன்று காலை வெளியே வந்தார். பரோலில் இருக்கும் அவருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள அவரது கணவர் முருகன், வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு ஹரித்ரா என்ற மேகரா என ஒரே மகள் உள்ளார். அவர் லண்டனில் படித்து வந்த அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

தனது மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தன்னை 6 மாத கால பரோலில் விடுவிக்க வேண்டுமென்று கோரி நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனுைவ விசாரித்த உயர்நீதிமன்றம், நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்குமாறு கடந்த 5ம் ேததி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, சிறைத்துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்ெகாண்டது. இதன்பின், இன்று(ஜூலை 25) காலை 8.30 மணியளவில் வேலூர் சிறையில் இருந்து நளினி வெளியே வந்தார். பரோலில் வந்துள்ள நளினி, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் தங்குவார் எனத் தெரிகிறது. நளினி பரோலில் இருக்கும் ஒரு மாதத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரையும் சந்திக்கக் கூடாது. ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை சிறைத்துறை விதித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை கோரிய நளினி மனு தள்ளுபடி

More News >>