கார்கில் போர் வீரர்களை சந்தித்தது மறக்க முடியாது நினைவு கூறும் பிரதமர் மோடி
கார்கில் போரில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை, தான் நேரில் சந்தித்ததை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி, அந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
கார்கில் போர் வெற்றி தினம் மற்றும் மறைந்த வீரர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்ற போது, கார்கிலுக்கு சென்று நமது துணிச்சலான வீரர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
அந்த காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் நான் கட்சிப்பணியில் ஈடுபட்டு இருந்தேன். அதன் காரணமாக, நான் கார்கில் சென்றதும், நமது வீரர்களுடன் கலந்துரையாடியதும் மறக்கவே முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மீது சாமி கடும் அதிருப்தி