அதிமுக செய்தது சரியா? ப.சிதம்பரம் ட்வீட்
மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்து வாக்களித்திருக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு, திருத்தச் சட்டமசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. அந்த சட்டத்தை மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை கொண்ட பாஜக அரசு எளிதாக நிறைவேற்றி விட்டாலும், மாநிலங்களவையில் நிறைவேற்றுவது கடினம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு மற்றும் கூச்சல், குழப்பங்களுக்கு இடையே அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில், தகவல் ஆணையர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அந்த ஆணையத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமாறு செய்திருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘தகவல் உரிமைச் சட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கின்றன. மாநிலங்கள் அவையில் 13 அஇஅதிமுக உறுப்பினர்கள், திருத்தங்களை ஆதரித்து வாக்களித்தனர்’’ என்று கூறியுள்ளார்.
மாநிலங்களின் உரிமைகளை மத்திய பாஜக அரசு பறிக்கும் போதெல்லாம் அதை எதிர்க்காதது மட்டுமல்ல, ஆதரித்தும் அதிமுக வாக்களிக்கிறது என்பதைத்தான் சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு இதில்தான் முதலிடமா? ப.சிதம்பரம் கடும் விமர்சனம்