சாப்பிட்டால் சும்மா அப்படி இருக்கும்.. வெஜ் மோமோஸ் ரெசிபி
சுவையான வெஜ் மோமோஸ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
வெங்காயம் - 1
கேரட் - ஒரு கப்
முட்டைகோஸ் - அரை கப்
குடைமிளகாய் - அரை கப்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 20 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் வேகவைத்து வைக்கவும்.
பிறகு, மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரி அளவிற்கு விரித்துக் கொள்ளவும்.
இதன் நடுவில், வேகவைத்த காய்களை வைத்து, அனைத்து பக்கமும் சேர்த்து மூடிவிடவும்.
இதனை, இட்லி குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
சுவையான வெஜ் மோமோஸ் ரெடி..!