செட்டிநாடு ஸ்டைல் தேங்காய் பாறை மீன் குழம்பு ரெசிபி
செட்டிநாடு ஸ்டைலில் தேங்காய் பாளை மீன் குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
தேங்காய் பாறை மீன் - 2
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 5
பூண்டு - 10
இஞ்சி (நறுக்கியது) - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - இரண்டரை டீஸ்பூநன்
மல்லித்தூள் - 3
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய்
கல் உப்பு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடானதும் 10 சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துருவியத் தேங்காய், புளி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். புளியை அப்படியே போடலாம்.. கரைசல் தேவையில்லை.
இந்த கலவையை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
இதற்கிடையே, மீன்களை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாகபோட்டு தயாராக வைக்கவும். அதில், மஞ்சள் தூள், எலுமிச்சைப்பழ சாறு, கல் உப்பு சேர்த்து கலந்து சுமார் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி தாளிக்கவும்.
இதனுடன், அறைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கலக்கினீடவும்.தேவைப்பட்டால், தண்ணீர், உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
இந்நிலையில், மீன் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மீன் வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
கமகமக்கும் செட்டிநாடு தேங்காய்ப் பாறை மீன் குழம்பு ரெடி..!
அருமையான கத்திரிக்காய் சாதம் ரெசிபி