நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெண் பொங்கல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 2
முந்திரி - 10
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு
செய்முறை:
முதலில் பச்சரிசி, பாசிரிப்பருப்பு ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்யவும்.
குக்கரில் 3 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் அரிசி, பருப்பு, உப்பு சேர்க்கவும்.
ஒரு கப் அரிசிக்கு இரண்டு பங்கு அளவு தண்ணீர் சேர்த்து சுமார் 5 விசில்விட்டு வேகவிடவும்.
அரிசி, பருப்பு வெந்ததும் சூடாக இருக்கும்போதே கரண்டியைக் கொண்டு நன்றாக குழைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் முந்திரி போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
இன்னும் சிறிது நெய் சேர்த்து, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து பொரிக்கவும்.
பிறகு, இவற்றை பொங்கலில் சேர்த்து முழுமையாக கிளறவும்.
இறுதியாக, நெய் சேர்க்கலாம்.
கமகமக்கும் வெண் பொங்கல் ரெடி..!
மொறு மொறு முட்டை போண்டா ரெசிபி